இயக்குநர் வேலு பிரபாகரன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 18) காலமானார். அவருக்கு வயது 68. director velu prabhakaran died
தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் வேலு பிராபகரன். அதன்பின்னர் இயக்குனர், நடிகர், எழுத்தாளர் என பல அவதாரங்களில் இயங்கி வந்தார். 1989ஆம் ஆண்டு பிரபு நடித்த ‘நாளைய மனிதன்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கிய அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன், ஒரு இயக்குநர் காதல் டைரி உள்ளிட்ட படங்கள் சர்ச்சையாகவும் மாறியது. இதனால் சர்ச்சைக்குரிய இயக்குநர் என்று பெயரும் பெற்றார்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துவிட்டார்.
அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் நாளை மாலை முதல் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து 20ஆம் தேதி போரூர் மயானத்தில் உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்படும் என அவர்து குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
