IPL2024: கம்மின்ஸ், ஷர்துலை விட இவரு பெட்டர்… ஆனா சென்னை இதை செய்வாங்களா?

Published On:

| By Manjula

ஐபிஎல் ஏலத்தில் பேட் கம்மின்ஸ், ஷர்துல் தாகூரை காட்டிலும் இந்த வீரர் சென்னை அணிக்கு பொருத்தமாக இருப்பார் என முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அணிகளுக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் சமீபத்திய உலகக்கோப்பை தொடரில் நன்றாக ஆடிய வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணியும் திட்டம் தீட்டி வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ”சென்னை அணி பேட் கம்மின்ஸ், ஷர்துல் தாகூர் ஆகியோரை எடுப்பதை காட்டிலும் ஹர்ஷல் படேலை அணிக்கு எடுக்கலாம்.

ஒருவேளை சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனால் அவருக்கு சிறந்த ஒரு மாற்று வீரராக ஹர்ஷல் இருப்பார். அதேபோல ரஹானே 3-வது இடத்தில் இறங்கினாலும் அவர் அதிரடியாக ஆடுவதில்லை.

எனவே ரஹானேவின் இடத்திற்கு ஒரு மாற்று வீரரும் தேவைப்படுகிறார். அதேபோல தோனியும் 8-வது இடத்திற்கு முன்னால் இறங்க மாட்டார் என்பதை கருத்தில் கொண்டு, அம்பாதி ராயுடு இடத்திற்கும் பொருத்தமான ஒரு வீரரை சென்னை அணி தேர்வு செய்ய வேண்டும்” என ஆலோசனை வழங்கியுள்ளார்.

அம்பாதி ராயுடு இடத்தை சென்னை அணி யாரை வைத்து நிரப்பப்போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

“புத்தகங்களை பாதுகாக்க போராடுகிறோம்”: எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் கவலை!

“மழையால் சேதமடைந்த புத்தகங்கள்” : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share