போர் பதற்றம் : சென்னை மெட்ரோ, ஏர்போர்ட்டில் தீவிர சோதனை!

Published On:

| By Kavi

Intensive checks at Chennai Metro

இந்தியா பாகிஸ்தான் இடையே மாறி மாறி தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. Intensive checks at Chennai Metro

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தசூழலில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் இந்த சோதனையானது நடந்து வருகிறது.

அந்தவகையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலைய பார்க்கிங், நடைமேடை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. ஒரு மெட்ரோ நிலையத்தில் இருந்து இன்னொரு மெட்ரோ நிலையத்துக்கு ரயிலிலேயே மோப்ப நாய்களை அழைத்துச் சென்று ஒரு இடம் விடாமல் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முதல் இந்த பணி நடந்து வருவதாக சோதனையில் ஈடுபடும் வெடிகுண்டு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முன்னதாக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதைத்தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான பாதுகாப்பு படை பிரிவினர், போலீசார் விடுமுறைகள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்றும் தீவிர கண்காணிப்புகள் சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Intensive checks at Chennai Metro

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share