5 முக்கிய தீவிரவாதிகள் கொலை : இந்திய ராணுவம் தகவல்!

Published On:

| By Kavi

 5 terrorist killed by indian army

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் ஏவுதளங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது.  5 terrorist killed by indian army

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்கி வருகிறது.

ADVERTISEMENT

இதனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் அனைத்து ஆயுத தாக்குதல் முயற்சிகளையும் இந்தியா முறியடித்து வருகிறது. 

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய நான்கு எல்லை மாநிலங்களில் 36 இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை சுதர்சன் சக்கரம் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் பாதுகாப்பு படை கூறுகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஏவுதளங்களை அழித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “மே 8-9 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட இரவில் காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. 

ADVERTISEMENT

இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இருந்த பாகிஸ்தான் பயங்கரவாத ஏவுதளங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.

இந்திய ராணுவத்தின் அதிரடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள்  பயங்கரவாதிகளின் இயங்குதிறனுக்கு பலத்த அடியாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இந்தியாவின் தொடர் தாக்குதலில் முக்கிய 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

முதாசர் காதியன் காஸ், ஹபீஸ் முஹமது ஜமீல், முகமது யூசுப் அசார், காலித் என்ற அபு ஆகாஷா மற்றும் முகமது ஹசன் கான் ஆகியோர் கொள்ளப்பட்டுள்ளனர்.

முதாசர் காதியன் காஸ்

இதில், முதாசர் மற்றும் அபு ஜுண்டால் ஆகிய பெயர்களால் அறியப்பட்ட முதாசர் காதியன் காஸ் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். இந்திய எல்லையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பாகிஸ்தானின் முரிட்கேவில் செயல்பட்டு வந்த மர்காஸ் தைபா என்ற பயங்கரவாத முகாமின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தவர். 2008 மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப்,  26/11 தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதி டேவிட் ஹெட்லி ஆகியோர் இந்த முகாமில் பயிற்சி பெற்றவர்கள். 

ஹபீஸ் முஹமது ஜமீல்  5 terrorist killed by indian army

இவர், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையவர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனர் மௌலானா மசூத் அசாரின் மைத்துனர் ஆவார். பஹவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லாவின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தவர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு ஆட்சேர்ப்பு, நிதி திரட்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார்.

முகமது யூசுப் அசார்  5 terrorist killed by indian army

ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர். தீவிரவாதி மசூத் அசாரின் மைத்துனர், மேலும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கான ஆயுதப் பயிற்சியையும் மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களிலும், 1999 ஆம் ஆண்டு ஐசி-814 விமானக் கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். விமான பயணிகளை பணய கைதிகளாக வைத்து மிரட்டியதன் விளைவாக அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசாரை இந்தியா விடுவித்தது.

அபு ஆகாஷா  5 terrorist killed by indian army

காலித் என்கிற அபு ஆகாஷா, ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட லஷ்கர் பயங்கரவாதி ஆவார். ஆப்கானிஷ்தானில் இருந்து லக்‌ஷர் இ தொய்பா அமைப்புக்கு ஆயுதங்களை கடத்தி வரும் செயலில் ஈடுபட்டு வந்தவர். இவரது இறுதிச் சடங்கில் தான்  பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பைசலாபாத் துணை ஆணையர் கலந்து கொண்டனர் என்று தகவல்கள் வருகின்றன. 

முகமது ஹசன் கான்  5 terrorist killed by indian army

தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது குழுவைச் சேர்ந்த கான், மே 7 அன்று நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share