இந்தியா பாகிஸ்தான் இடையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில் எல்லையில் பதட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Nirmala Sitharaman important order to banks
இந்தநிலையில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 9ஆம் தேதி ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தினார்.
பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இணைய வங்கி மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் பயன்பாடுகள் உட்பட வங்கித் துறையின் செயல்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பாய்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சவாலான காலங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் வங்கி மற்றும் நிதித் துறையின் முக்கிய பங்கு குறித்து வலியுறுத்தி பேசினார்.
அதாவது, எந்தவொரு நிகழ்வு அல்லது நெருக்கடியையும் சமாளிக்க அனைத்து வங்கிகளும் முழுமையாக விழிப்புடனும் தயாராகவும் இருக்க வேண்டும்.
நாடு முழுவதும், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவைகளுக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்ய வேண்டும்.
நேரடி மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள், இடையூறுகள் மற்றும் குறைபாடுகள் இல்லாமல் செயல்பட வேண்டும் .
குடிமக்கள் மற்றும் வணிகங்கள் எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். Nirmala Sitharaman important order to banks
ஏடிஎம்களில் சீராக பணம் கிடைப்பது, தடையற்ற யுபிஐ மற்றும் இணைய வங்கி சேவைகள் மற்றும் அத்தியாவசிய வங்கி வசதிகளை தொடர்ந்து அணுகுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். Nirmala Sitharaman important order to banks
மேலும் அவர், மத்திய நிதி தலைமையகத்தில் அடையாளம் காணப்பட்ட இரண்டு மூத்த அதிகாரிகளை நியமிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டார்.
அதில் ஒருவர் சைபர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பதிவு செய்ய வேண்டும், மற்றொருவர் வங்கி கிளைகளின் செயல்பாடு மற்றும் ஏடிஎம்களில் பணம் கிடைப்பது உள்ளிட்ட செயல்பாட்டு விஷயங்களை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு சம்பவத்தையும் நிகழ்நேர அடிப்படையில் கணினி அவசர கால மீட்புக்குழு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நிதி சேவைகள் துறைக்கு தெரிவிக்குமாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
காப்பீட்டு நிறுவனங்கள் சரியான நேரத்தில் உரிமைகோரல் தீர்வுகள் மற்றும் தடையற்ற வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்யுமாறும் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.Nirmala Sitharaman important order to banks