இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நடந்து வரும் நிலையில் ராணுவத்திற்கு உதவ தயார் என்று ஏராளமான இளைஞர்கள் சண்டிகரில் குவிந்துள்ளனர்.Ready to help army Youth gathered
கடந்த மே 7ஆம் தேதி இரவு முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சாப், சண்டிகர், குஜராத், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே ட்ரோன்களும், ஏவுகணைகளின் பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன.
எல்லையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த்குமார் நேற்று இரவு தன்னுடைய x பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்புப் படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் மே 10 தேதி காலை 10 மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த பதிவைத் தொடர்ந்து இன்று காலை முதலே அந்த பகுதியில் ஏராளமான இளைஞர்கள் குவியத் தொடங்கினர்.
அப்போது அவர்கள் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும், இந்திய ராணுவத்துக்கு உதவத் தயார் என்று கோஷமிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஏராளமான இளைஞர்கள் ஒரு இடத்தில் குவிந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இவர்களுக்கு இன்று இரவு 10:30 மணியளவில் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. Ready to help army Youth gathered