இந்திய அணி வீரர்கள் பேரணி: கட்டுக்கடங்காத கூட்டம்… திக்குமுக்காடிய மும்பை!

Published On:

| By Selvam

மும்பை நாரிமன் பாயிண்ட் முதல் வான்கடே மைதானம் வரை இந்திய அணி வீரர்கள் பேரணி செல்ல உள்ள நிலையில், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் இருந்து இன்று (ஜூலை 4) அதிகாலை நாடு திரும்பினர். இதனையடுத்து டெல்லியில் இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார்.

தொடர்ந்து வீரர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் உங்கள் செயல்திறனை கண்டு பெருமை கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், நகரத்திலும் உள்ள எண்ணற்ற வீரர்களின் இதயங்களை நீங்கள் வென்றுள்ளீர்கள்” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

தொடர்ந்து டெல்லியில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு இந்திய அணி வீரர்கள் வந்தனர். அங்கிருந்து பேருந்தில் பயணம் செல்லும் வீரர்கள், மும்பை நாரிமண் பாயிண்ட் முதல் வான்கடே மைதானம் வரை பேரணி செல்ல உள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது.

இந்திய அணி ரசிகர்கள் பேரணி செல்ல உள்ளதால், தெற்கு மும்பையில் உள்ள ஏழு சாலைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

மாலை 4 மணியில் இருந்து வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. முதலில் வரும் ரசிகர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜய்யுடன் ரிலேஷன்ஷிப்பா? த்ரிஷா கொடுத்த அதிரடி ரிப்ளை!

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share