நடிகர் விஜய், த்ரிஷா குறித்து வெளியான வதந்திகளுக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் விஜய்யும், த்ரிஷாவும் கடைசியாக லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விஜய் விரைவில் தன்னுடைய மனைவியான சங்கீதாவை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, த்ரிஷா அவருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார்.
இதுகுறித்து பாடகி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “நடிகை த்ரிஷா ஒரு பாரசைட். விஜய்யுடன் த்ரிஷா சொந்தம் கொண்டாடுவதற்கு காரணமே மனைவி சங்கீதாவை பிரிந்து விஜய் தனிமையில் இருப்பது தான்.
அரசியலுக்கு வரும் ஆசை த்ரிஷாவுக்கு உள்ள நிலையில், நடிகர் விஜய்யை அதற்காக அவர் பயன்படுத்த நினைப்பது ரொம்பவே பெரிய தவறு. விஜய் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்” என்று சுசித்ரா பேசி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கெல்லாம் மறைமுக பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை த்ரிஷா, தனது சமூக வலைதளப்பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டு, பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், “ நீங்கள் எதையாவது தவிர்க்க விரும்பினால், மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை உங்கள் சுமையாக ஏற்றுக்கொள்ளாதீர்கள்” என்று பதிவிட்டு உள்ளார். நடிகை த்ரிஷாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 World Cup: இந்திய அணி வீரர்களிடம் மோடி சொன்ன அந்த விஷயம்!
தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: ’ராயன்’ ஆடியோ லாஞ்ச் எப்போது?