இந்தியா கூட்டணி: ஒருங்கிணைப்பாளர் குழுவில் ஸ்டாலின்

Published On:

| By christopher

India alliance: 13 member coordination committee announced

மும்பையில் 2வது நாளாக நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில்  முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு இன்று (செப்டம்பர் 1) அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தியா( I.N.D.I.A )என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டணியின் 3வது கூட்டம் மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று தொடங்கியது.

ADVERTISEMENT

மொத்தம் 28 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தியா கூட்டணியின் கூட்டத்தில், தொகுதி பங்கீடு, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி லோகோ குறித்து இறுதி முடிவெடுக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2வது நாளான இன்று, இந்தியா கூட்டணியின் 13 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பாளர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், கே.சி.வேணுகோபால்(காங்கிரஸ்), சரத் பவார்(என்சிபி), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (திமுக), சஞ்சய் ராவத்(சிவசேனா), பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்(ஆர்ஜேடி), அபிஷேக் பானர்ஜி(டி.எம்.சி), ராகவ் சத்தா(ஏஏபி), ஜாதவ் அலி கான் (எஸ்பி), லாலன் சிங்(ஜேடியு), ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்(ஜேஎம்எம்), டி.ராஜா(சிபிஐ), உமர் அப்துல்லா(என்.சி), மெகபூபா முப்தி(பிடிபி).

Image

அதேவேளையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் குழுவில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

யுபிஐ வசதியுடன் ‘ஸ்மார்ட் ரிங்’: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் அசத்தல்!

தன் பங்கிற்கு களமிறங்கிய டிவிஎஸ்…. புதிய அப்டேட் இதோ!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share