கடந்த சில வருடங்களாக மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன, இதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றமும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
ஏத்தர், ஓலா போன்ற நிறுவனங்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது களத்தில் குதித்துள்ளது டிவிஎஸ்.
தற்போது தனது அடுத்த படைப்பான டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இருசக்கர வாகன அறிமுகம் துபாயில் நடைபெற்று, உலகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனமானது முதல்கட்டமாக பெங்களூரில் விற்பனைக்கு வரவுள்ளது. வரும் நவம்பர் முதல் டெலிவரியை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து 2024 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விற்பனை தொடங்கும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பெங்களூர் ஷோரூமில் ரூ.2,49,900க்கு விற்பனை செய்யப்படும் எனவும், ஸிலிட்டன் பிளாட்பாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மற்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை காட்டிலும் அதிவேகமானதாக இருக்கும்.
ரேம் ஏர் கூல்டு மோட்டர் இருப்பதால் தானாக குளிர்வித்துக் கொள்ளக்கூடிய திறன் கொண்டது. தீப்பற்றக்கூடிய அபாயம் குறைவு. இதன் ஹேண்டில்பார் எக்ஸ் வடிவிலும், 10.5 இன்ச் பனோராமிக் டிஎஃப்டி டிஸ்ப்ளே உடன் கூடிய தேவையான திசையில் சரிசெய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டள்ளது.
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் சக்கரங்கள் சிலிக்கான் சார்ந்த பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், நல்ல பயண அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும்,
எல்இடி டெக் 2.0 தொழில்நுட்ப எட்லைட் மற்றும் மிகவும் வசதியாக அமரக்கூடிய வகையில் இருக்கைகள் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
4.4kwh பேட்டரி திறனுடன், 140கிமீ வரை இயங்கும் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 105கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எண்ணற்ற சிற்ப்பம்சங்களை கொண்டுள்ள டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது என்றே சொல்லலாம்.
-பவித்ரா பலராமன்
‘விஜய் 68’ படத்தில் ‘மங்காத்தா’ இடம்பெறுமா?