அதிமுகவை அழிக்க நினைத்தால் இப்போது ஒருவருக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று ஓபிஎஸ் பெயரை சொல்லாமல் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அருணாசலத்தை ஆதரித்து அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 5) பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுகவை வீழ்த்த, திமுக தலைவர் எத்தனையோ அவதாரங்களை எடுத்தார். திமுக எடுத்த அத்தனை அவதாரங்களையும் மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கிய கட்சி அதிமுக.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் எத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆளுநரின் உத்தரவின் பேரில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அந்த சமயத்தில் ஓட்டெடுப்பு நடந்தபொழுது என்னென்ன கூத்து நடந்தது என அனைவருக்கும் தெரியும்.
எதிர்த்து ஓட்டுபோட்டவர்கள் யார் என்றும் தெரியும். அன்றைய தினமே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆத்மா அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணியது. அந்த தண்டனை இன்றைக்கு கொடுக்கப்பட்டு விட்டது.
இந்த இயக்கத்துக்கு யார் துரோகம் செய்தாலும் இப்போது ஒருவருக்கு கிடைத்த பரிசுதான் அவர்களுக்கும் கிடைக்கும். இது தெய்வ சக்தி கொண்ட இயக்கம். யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்துபோய்விடுவார்கள்” என முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் பெயரை குறிப்பிடாமல் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை எத்தனையோ முறை திமுக உடைக்க, ஒடுக்க, முடக்க நினைத்தது. ஆனால் அதை மக்களின் துணையோடு அதிமுக தவிடு பொடியாக்கியது” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
பிரியா
“திமுகவால் முடியுமா என கேட்டவர்களுக்கான பதில்”: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஸ்டாலின் வரவேற்பு!
பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் : பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!
Comments are closed.