பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் : பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published On:

| By Kavi

பறக்கும்படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள் கார்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 5) தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பறக்கும்படை அதிகாரி முருகேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தலைமைக் காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் காரில் வந்தார். அவரது காரையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட நிறுத்தினர்.

அப்போது ஏ.பி.முருகானந்தத்தின் காரை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஓரமாக நிறுத்துமாறு போலீசார் கூறியிருக்கின்றனர்.

இந்தசூழலில்,  ‘மரியாதையாகப் பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்’ என்று ஏ.பி.முருகானந்தம் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை டேக் செய்து, திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இராமநாதபுரம்: ஓ.பி.எஸ் பலாப்பழத்தை கூர்போடும் அதிமுக? ஏணியை தள்ளிவிடும் அமைச்சர்?

மயிலாடுதுறை : சிறுத்தையை பிடிப்பதில் சிரமம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share