முதுமைக்கு நரை அழகுதான் என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இன்றோ இள வயதினருக்கும் முடி நரைக்கிறது… தோற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட பலருக்கும் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
நரைமுடியை கறுப்பாக்க பலவிதமான சாயக் கலவைகள் தற்போது கிடைக்கின்றன. ஆனால், இவை எல்லாம் நரையை மறைத்தாலும், நிரந்தரமான தீர்வு தராது என்பதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. நரைமுடியை, வந்த பிறகு மாற்றுவது மிகவும் கடினம் என்பதால், நரை வராமல் பாதுகாப்பதே மிகவும் சிறந்தது.
அதற்கு நாள்தோறும் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்…
* தேவையான அளவு தண்ணீர் அருந்துதல்.
* பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை – இவற்றைத் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
* புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுச்சத்துகள் குறையாத வகையில் உணவுகளை உட்கொள்ளுதல்.
* தவறாமல் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தடவுங்கள்.
* வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம்.
* தலை தேய்த்துக் குளிக்க விதவிதமான ஷாம்பூக்களைப் பயன்படுத்தாமல் சிகைக்காயைப் பயன்படுத்துவது நல்லது.
* நாம் பயன்படுத்தும் சீப்பு (Comb), துண்டு (Towel)- போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
* முடிந்த அளவு வெயிலில் அலைவதைத் தவிர்ப்பது சிறந்தது.
* மன உளைச்சல் நீங்க முறையான யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளுதலும் இள நரையைத் தடுக்கும்.
* நல்ல தூக்கம் மிக அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சைதாப்பேட்டை வடகறி
நெற்றியில் பலத்த காயம் : மம்தாவுக்கு என்னாச்சு?
UPI: கூகுள் பே, போன் பே எல்லாம் ஓரமா போங்க… சவால் விடும் ஜியோவின் புதுவரவு!