கன்னியாகுமரியில் மோடி Top 10 News Tamil today march 15 2024
மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி இன்று (மார்ச் 15) காலை கன்னியாகுமரி வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் ஆணையர் நியமன வழக்கு விசாரணை!
புதிய தேர்தல் ஆணைய சட்டப்படி தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை குறைந்தது!
சென்னையில் நேற்று ரூ.102.73 ஆக இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ.100.73 ஆக குறைந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் ரூ.94.33-ல் இருந்து ரூ.92.33 ஆக குறைந்திருக்கிறது.
அதிமுக வழக்கில் இன்று தீர்ப்பு!
அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் தொடர்பாக புகழேந்தி தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
தேர்தல் பத்திரம் – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட உறையில் அளிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நீர் மோர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!
தமிழ்நாட்டில் 48 முதல்நிலை கோயில்களில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனஅமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
வார விடுமுறையை முன்னிட்டு இன்று கூடுதலாக 360 சிறப்பு பேருந்துகளும், நாளை 420 பேருந்துகளும் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளன.
பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்!
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதையொட்டி, இன்று நடைபெறவிருந்த பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஆரம்பம்!
மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மஹாராஷ்டிராவின் நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில இந்திய பிரதிநிதி சபா குழுவின் கூட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
பே.டிஎம் பாஸ்டேக் செல்லாது!
பே.டி.எம் பாஸ்டேக் இன்று முதல் செல்லாது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சைதாப்பேட்டை வடகறி
தேர்தல் பத்திர நிதி : ரூ.6,060 கோடி வாங்கிய பாஜக – திமுக, அதிமுக வாங்கியது எவ்வளவு?