ADVERTISEMENT

ஒரு துளி எண்ணெய் இல்லாமல் சுவையாக சமைக்கலாம் : எப்படி தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

how to cook deliciously without a drop of oil

அதிகப்படியான எண்ணெய் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மோசமானது. இது எடை அதிகரிப்பு, இதய நோய், கல்லீரல் பிரச்னைகள் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்தை ஏற்படுத்துகிறது. எண்ணெய் அதிகளவில் சேர்ப்பதால் அஜீரணம் மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளும் ஏற்படுத்துகின்றன.

எண்ணெய் இல்லாமல் சமைப்பது நமக்கு சாத்தியமற்றதாகவும் சுவையற்றதாகவும் தோன்றலாம். ஆனால், உண்மையிலேயே எண்ணெய் இல்லாமல் சமைக்கும் உணவு நல்ல சுவையுடனும் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கிறது. நாம் அதிக எண்ணைய் உற்றி பொறித்து சாப்பிடுவதை விட, லேசாக எண்ணெயுடன் வறுத்து சாப்பிடலாம் அல்லது வேகவைத்தோ, குழம்பாகவும் கூட சாப்பிடலாம்

ADVERTISEMENT

எண்ணெய் இல்லாமல் சமைப்பது நம் ஆரோக்கியத்திற்கும் நீண்ட காலம் நலமுடன் வாழ்வதற்கும் உதவிபுரியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். எண்ணெய் இல்லாமல் அதே சமயம் சுவையுடன் சமைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

1) குழம்பு வகைகள்

ADVERTISEMENT

2) சூப் வகைகள்

3) வேகவைத்தல்

ADVERTISEMENT

4) நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துதல்

5) கிரில் மற்றும் ரோஸ்ட்

குழம்பு வகைகள்

எண்ணெய் பயன்படுத்தாத குழம்புகளை செய்து சாப்பிடுவது உண்மையிலேயே மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கும். வெங்காயம், பூண்டு, தக்காளி வதக்குவதற்கு எண்ணெய்க்கு பதிலாக நாம் கோழி, ஆடு அல்லது காய்கறி சூப்பை பயன்படுத்தலாம். முதலில் ஒருமாதிரி இருந்தாலும் பிறகு எண்ணெய் இல்லாமல் சுவையாக சமைக்க பழகிவிடலாம்.

சூப் வகைகள்

என்னையில்லாமல் சமைப்பதில் சூப் வகைகள் முக்கிய பங்காற்றுகிறது. இதில் காய்கறிகள் கொதிக்க வைப்பதால் அதில் இருக்கும் சத்து அப்படியே நமக்கு கிடைக்கிறது. முட்டை, சிக்கன், மட்டன் என நாம் அனைத்தையும் பயன்படுத்தலாம். முட்டையை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கிறது. முட்டையை வறுத்தோ, பொறித்தோ நாம் சாப்பிட்டால் அதிக கலோரி இருப்பதால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

ஆவியில் வேகவைத்தல் அல்லது அவித்தல்

எண்ணெய் இல்லாமல் சமைப்பதற்கான சிறந்த முறை ஆவியில் வேகவைத்தல். இந்த முறையினால் காய்கறிகள் மற்றும் இறைச்சிகளின் ஈரப்பதம் மாறாமல் அப்படியே நமக்கு முழு சத்தும் கிடைக்கிறது. தாதுக்கள், வைட்டமின்கள் பாதுகாக்கப்படுகின்றன. வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் மசாலா பொருட்களும் குறைப்பதன் காரணமாகவும் அஜீரணம், செரிமான பிரச்சனைகள் குறையும். அதிக உடல் பருமன் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபடலாம்

நான்ஸ்டிக் பாத்திரங்கள்

குறைந்த அளவு என்னை அல்லது எண்ணெயே இல்லாமல் சமைப்பதற்கு நான் ஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் பீங்கான் பாத்திரங்கள் நமக்கு பெரிதும் உதவுகிறது, ஆனால் அதிக வெப்ப நிலையில் நான் ஸ்டிக் பாத்திரங்களை கொண்டு நாம் சமைப்பதால் நான் ஸ்டிக்கின் மேல் பூச்சு வெளிவர தொடங்கும்./ எனவே குறைந்த வெப்ப நிலையில் நான் ஸ்டிக் பயன்படுத்துவது நல்லது.

கிரில் மற்றும் ரோஸ்ட்

பொதுவாக கிரில் சிக்கன் சாப்பிட நாம் அனைவரும் விரும்புவோம். ஆனால் சிக்கன் மட்டுமல்லாமல் காய்கறிகள் பன்னீர், மீன் போன்றவற்றையும் நாம் கிரில் செய்து சாப்பிட்டால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதற்கு எண்ணெய் தேவையில்லை என்பதால் இது சிறந்த முறையாக கருதப்படுகிறது. கிரில்லில் இருந்து வரும் செறிவூட்டப்பட்ட வெப்பம் உணவின் சுவையை அதிகரிக்கிறது. இதேபோல எண்ணெய் இல்லாமல் தோசைக் கல்லில் போட்டு ரோஸ்ட் செய்து சாப்பிடுவதும் உண்மையில் நன்மை பயக்கும்.

மாறிவரும் சூழ்நிலை காலநிலைகளில் நாம் ஆரோக்கியமாக இருப்பதே நமக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஆரோக்கியமான உணவு முறை நாம் வாழ்க்கையை மேம்படுத்த உதவி உதவுகிறது என்பதை தெரிந்து நாம் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதே சிறந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share