Spam கால் மற்றும் மெசேஜ் தொல்லையா?… இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க!

Published On:

| By Manjula

நாம் வேலைகளில் பிஸியாக இருக்கும் போதும், முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போதும் தேவையில்லாத போன் கால், மெசேஜ்னு வந்து நம்மள தொல்லை பண்ணும். அப்போ செமையா கோபம் வந்தாலும், என்ன பண்ணி இந்த மாதிரி spam மெசேஜ், கால்ஸ் ப்ளாக் பண்றதுன்னு தெரியாம கொழப்பத்துல இருப்போம்.

ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்தமாதிரி போன் கால் மெசேஜ் வந்தால் பொறுத்துக்கலாம். ஆனா நாள் முழுக்க பலமுறை வந்து முக்கிய வேலை நேரங்களில் தொந்தரவாக இருக்கும் போது இதனால் மிஞ்சுவது கோபம் மற்றும் மன அழுத்தம் மட்டுமே.

இதுமட்டுமின்றி தினம் போன் செய்து லோன் வேண்டுமா? க்ரெடிட் கார்ட் வேண்டுமா? என கேட்கும் போது சிலர் லேசான மன சஞ்சலத்தில் வாங்கிவிட்டு, பின் அதை கட்ட முடியாமல் தவிப்பதை நாம் அன்றாடம் பார்த்தும் கேட்டும் வருகிறோம்.

இதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்று பார்க்கும் போது நமது மொபைல் போனில் இருந்து 1909 என்ற எண்ணிற்கு FULLY BLOCK என்ற மெசேஜ் அனுப்பினால் போதும். உடனடியாக உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜ் வரும்.

அடுத்த 24 மணி நேரத்தில் உங்களது மொபைல் போனிற்கு வரும் Spam கால் மற்றும் மெசேஜ் அனைத்து BLOCK செய்யப்படும். இந்த சிம்பிளான விஷயத்தை ட்ரை பண்ணி நீங்களும் Spam கால், மெசேஜ் தொல்லையில் இருந்து விடுபட வாழ்த்துகள்!

-பவித்ரா பலராமன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Premalu: தமிழில் வெளியாகும் ‘பிரேமலு’ ரிலீஸ் தேதி இதுதான்!

காங்கிரஸ் – திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து: எத்தனை சீட்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share