ADVERTISEMENT

டிசம்பரில் யுஜிசி நெட் தேர்வு… விண்ணப்பிப்பது எப்படி?

Published On:

| By christopher

How to apply for the UGC NET exam in December

UGC NET December 2025: யுஜிசி நெட் தேர்வு என்பது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) படிப்புக்கான தேசியத் தகுதித் தேர்வாகும். என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வு முகமை இத்தேர்வை நடத்துகிறது.

அதன்படி வரும் டிசம்பரில் நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாளர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான சோதனை (CBT) முறையில், இந்தியா முழுவதும் பல மையங்களில் மொத்தம் 85 பாடங்களுக்கு நடத்தப்படும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க அக்டோபர் 7 முதல் நவம்பர் 7 (இரவு 11:50 மணி வரை) காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் விண்ணப்ப்பத்தில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 10 முதல் நவம்பர் 12ஆம் தேதி இரவு 11:50 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொது (தனிப்பிரிவு)க்கு 1,150 ரூபாயும், பொதுபிரிவுக்கு (EWS / OBC-NCL) 600 ரூபாயும், SC / ST / PwD / மூன்றாம் பாலினத்தவருக்கு 325 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க்கிங் அல்லது UPI முறை மூலம் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வாளர்கள் விண்ணப்பிப்பதற்கும் முதலில் பதிவு (Registration) செய்ய வேண்டியது கட்டாயம். அதன்படி,

முதலில் ugcnet.nta.nic.in க்கு செல்லவும்.

அங்கு முகப்புப் பக்கத்தில், “UGC NET December 2025 Registration” இணைப்பை கிளிக் செய்து அடிப்படை விவரங்களை உள்ளிட்டு கடவுச்சொல்லை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும்.

தேவையான தகவல்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பி, ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.

பின்னர் தங்களது பிரிவுக்கேற்ப ஆன்லைன் கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தேர்வு எப்போது?

தேர்வு நடைபெறும் நகரங்கள், நுழைவுச்சீட்டு வெளியீட்டு தேதி, தேர்வு அட்டவணை மற்றும் ரிசல்ட் தேதி ஆகியவை தேசியத் தேர்வுகள் முகமையால் பின்னர் அதன் இணையதளத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share