வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கு : அமைச்சர் ஐ பெரியசாமி ஆஜராக உத்தரவு!

Published On:

| By Kavi

வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

2006-11 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார் ஐ.பெரியசாமி.  அப்போது காவல்துறை உயரதிகாரியாக இருந்த ஜாபர் சேட் தனது மனைவிக்கு சமூக சேவகர் என்ற கோட்டாவில் அரசு நில ஒதுக்கீடு பெற்றார்.

ஜாபர்சேட்டின் மனைவி பர்வின், ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வின், ராஜமாணிக்கம், துர்கா சங்கர், க.முருகையா, டி. உதயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை தவிர மற்ற அனைவர் மீதான வழக்கை ரத்து செய்தும் வழக்கில் இருந்து விடுவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தசூழலில் மீண்டும் அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வழக்கு இன்று (செப்டம்பர் 13) சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே இவ்வழக்கில் ஆஜராகுமாறு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நேரில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் குற்றச்சாட்டு பதிவிற்காக ஐ.பெரியசாமி வரும் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக வில்லை என்பதால் தொடர்ந்து 9 ஆவது முறையாக குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைக்கப் பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

டிஜிட்டல் திண்ணை: ஜிலேபி முதல் மன்னிப்பு வரை… மிரட்டல், உருட்டல்! அன்னபூர்ணாவுக்கு நடந்தது என்ன?

இந்த வார ஓடிடி ரிலீஸ்: கல்பலி ரெக்கார்ட்ஸ் முதல் பச்சன் வரை!

கூலி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?- நடிகர் உபேந்திராவின் விசித்திர விளக்கம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share