லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் முதன் முறையாக நடித்துள்ளார் உபேந்திரா. கன்னடத்தில் முன்னணி நடிகரான உபேந்திரா, ‘கூலி’ படத்தில் நடிக்க ஓப்புக் கொண்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஸ்பீட் ப்ளஸ் கர்நாடகா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “சென்னையில் எனது படத்திற்கான இறுதிகட்டப் பணிகளில் இருந்தேன். அப்போது ஒரு இயக்குநர் என்னிடத்தில் பேச விரும்புவதாக தகவல் வந்தது. உடனடியாக, அவருக்கு போன் செய்து பேசினேன். அவர்தான் என்னிடத்தில் கூலி படத்தில் நடிக்க இஸ்டமா? என்று கேட்டார்.
பின்னர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னை நேரில் சந்தித்து கூலி படத்தின் கதையை விளக்கினார். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் போதும் என கூறிவிட்டேன்.
எனக்கு ரஜினி சார் வரும் காட்சியில் அவரின் அருகில் இருக்க வேண்டும், அது போதும் என்று தெரிவித்தேன். ரஜினி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பணத்துக்காக இந்த படத்தில் நான் நடிக்கவில்லை.
ஒரே ஒரு பெயருக்காக அந்த படத்தில் நான் நடிக்கிறேன். அது ரஜினிகாந்த். நான் அவருடைய பெரிய ரசிகன். எனக்கு துரோணாச்சர்யா போன்ற அவருடைய படத்தில் யார் தான் நடிக்கவில்லை என்று கூறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலுள்ள ஒரு மீன்பிடி துறைமுகத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து சர்ச்சைப் பேச்சு… டாக்டர் காந்தராஜ் மீது ரோகிணி புகார்!
அன்னபூர்ணா உரிமையாளர் வீடியோ வெளியீடு: மன்னிப்பு கேட்ட அண்ணாமலை