இந்த வாரம் நெட்ஃபிலிக்ஸ், ZEE5, ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அவை என்னென்ன என்பதை பார்ப்போம்…
செப்டம்பர் 12
கல்பலி ரெக்கார்ட்ஸ் (Khalbali Records)
‘கல்பலி ரெக்கார்ட்ஸ்’ என்றத் தொடர் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் நேற்று (செப்டம்பர் 12) வெளியானது.
எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடர், ராகவ் என்ற இசையமைப்பாளரின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம் அவரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை சொல்கிறது.
இதில் ஸ்கந்த் தாகூர், சலோனி பத்ரா, பஞ்சாபி ராப் பாடகர் பிரதீப் போன்றவர்கள் நடித்துள்ளார்கள். இது மட்டுமல்லாமல், ரேகா பரத்வாஜ், அமித் திரிவேதி, அனு மாலிக் போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களும் இதில் நடித்துள்ளார்கள்.
மிஸ்டர் பச்சன் (Mr.Bachchan)
ரவி தேஜா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் நெட்ஃபிலிக்ஸில் நேற்று வெளியானது.
இந்தப் படம் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘ரெய்டு’ என்ற இந்தி படத்தின் மறு ஆக்கம் ஆகும்.
இந்த படத்திற்கு மிக்கி மேயர் இசையமைத்துள்ளார் மற்றும் அயனன்கா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செப்டம்பர் 13
பெர்லின் (Berlin)
அபர்சக்தி குரானா, ஈஷ்வர் சிங், ராகுல் போஸ்ப் போன்றவர்கள் நடித்திருக்கும் இந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் ZEE5 ஓடிடியில் இன்று(செப்டம்பர் 13) வெளியானது.
1990 காலகட்டத்தில் நடக்கும் இந்த படத்தின் கதையில் வாய்பேசமுடியாத, காது கேளாத ஒரு நபரை அந்நிய நாட்டு உளவாளி என்று சந்தேகப்பட்டு, இந்திய அரசு அவரை விசாரிக்க தொடங்குகிறது. அதற்கு பின் அவருக்கு என்ன நடந்தது என்பது தான் கதை.
அடுல் சபர்வால் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ஸ்ரீதத்தா நம்ஜோஷி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐரீன் தர் மாலிக் இந்த படத்தை தொகுத்துள்ளார்.
செக்டர் 36 (Sector 36)
விக்ராந்த் மாசே, தீபக் தோப்ரியல் போன்றவர்கள் நடித்துள்ள இந்த படம் நெட்ஃப்லிக்ஸில் இன்று வெளியானது.
ஆதித்யா நிம்பல்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சௌரப் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தை தொகுத்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்ப்பாட்டம் அறிவித்த காங்கிரஸ்!
அதிமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கு : நீதிமன்றத்தில் அப்பாவு ஆஜர்!
கூலி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?- நடிகர் உபேந்திராவின் விசித்திர விளக்கம்!