புத்தாண்டில் கனமழை? : தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்!

Published On:

| By christopher

Heavy rain in the new year?

Heavy rain in the new year?

தென்மாவட்டங்களான நெல்லை, குமரியில் இன்று (டிசம்பர் 31) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“தமிழ்நாட்டில் அடுத்த 4-5 நாட்களுக்கு யாரும் மழையைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழையோ, மிதமான மழையோ பெய்ய வாய்ப்பில்லை. மழை பெய்தாலும் அது மிகவும் ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் இருக்கும்.

எனவே அடுத்த 4-5 நாட்களுக்கு யாரும் மழையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். புத்தாண்டில் உங்கள் வழக்கமான வேலையைத் தொடருங்கள்.

ADVERTISEMENT

தென் தமிழகத்தில் (நெல்லை மற்றும் தூத்துக்குடி)  கருமேகங்களால் சில துளிகள் மட்டுமே விழும். நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு இது கடினமான ஆண்டாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது கனமழை இல்லை என்பதால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

இனி தமிழ்நாட்டில் ஜனவரி 1வது வார இறுதியில் இருந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதுவும் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மாஞ்சோலையில் பெய்து வரும் அதிகபட்ச மழையும் இன்று முதல் குறையும். நாட்டிலேயே சிறப்பு வாய்ந்த இந்த பள்ளத்தாக்கு அங்கு நகரும் மேகத்தின் ஒவ்வொரு அங்குல ஈரப்பதத்தையும் உறிஞ்சுகிறது.

வடகிழக்கு பருவமழைக்கு (அக்டோபர் முதல் டிசம்பரில்) நாலுமுக்கு மற்றும் ஊத்து இரண்டும் 3000 மி.மீ மழையை தாண்டியதாக சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

புத்தாண்டில் மணிமுத்தாறு அணைக்கு செல்லும் நீர்வரத்து 5,000 கனஅடியாக இருந்தாலும் அங்கும் மழையை சமாளிக்க முடியும். அதன்பின்னர் நீர்வரத்து 2,000-3,000 கனஅடியாக குறையும். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

புத்தாண்டு கொண்டாட்டம்: மது விற்பனைக்கு நள்ளிரவு 1 மணி வரை அனுமதி!

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கி சூடு; வீடுகளுக்கு தீ வைப்பு!

Heavy rain in the new year?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share