புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கலால்துறை தெரிவித்துள்ளது.
கொண்டாட்டங்களுக்கு பெயர்போன புதுச்சேரியில் புத்தாண்டை விமரிசையாக கொண்டாட ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் மதுவகைகளும் அதிகளவில் விற்கப்படும் என்பதால் புத்தாண்டு நள்ளிரவில் மது விற்பனைக்கான அனுமதி நேரத்தை மேலும் ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது கலால்துறை.
வழக்கமாக புதுச்சேரியில் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை செய்யப்படும்.
இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இன்று நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று இரவு முதலே பல பகுதிகளில் இருந்து மக்கள் புதுச்சேரிக்கு படையெடுத்துள்ள நிலையில், நாளை ஒயிட் டவுன் பகுதியில் செஞ்சி சாலைக்கு கிழக்கே உள்ள டுமாஸ் வீதி, விக்டர் சிமோனல் வீதி, ரோமன் ரோலண்டு வீதி, சுயிப்ரேன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒயிட் டவுன் பகுதியில் இன்று போக்குவரத்து போலீசாருடன் 100 தன்னார்வலர்களும் கூடுதலாக போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கி சூடு; வீடுகளுக்கு தீ வைப்பு!
நெல்லை, தூத்துக்குடி மின்கட்டணம்: கால அவகாசம் நீட்டிப்பு!
எளிய ரயில் பயணமா… மோடியின் படத்துடன் செல்ஃபியா? : ராகுல் கேள்வி!