மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கி சூடு; வீடுகளுக்கு தீ வைப்பு!

Published On:

| By christopher

மணிப்பூர் மாநிலத்தில்  போலீஸ் கமாண்டோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது.

காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அசாம் ரைஃபில் கேம்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மொரெ நகரில் இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

துப்பாக்கி சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மணிப்பூரில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் விரைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 3.30 மணி முதலே கடுமையான துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் மொரே பகுதியில் புதிய நுழைவு வாயில் மற்றும் சானோவ் கிராமத்தில் துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பல வீடுகள்  பற்றி எரிவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிளாம்பாக்கம் டூ கோயம்பேடு : 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9

சண்டே ஸ்பெஷல்: புத்தாண்டு முதல் இன்ஸ்டன்ட் மிக்ஸ் உணவுகளைத் தவிர்க்கலாமே…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share