ADVERTISEMENT

ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை :ஆளுநர் ஒப்புதல்!

Published On:

| By Kavi

Higher Education to Rajakannapan Governor approval

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறையை ஒதுக்கியதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய அமைச்சர், எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவரது துறையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதற்கான பரிந்துரையை அரசு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

ADVERTISEMENT

இந்த பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Image

ADVERTISEMENT

உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கியதற்கும், அவர் கவனித்து வந்த காதி மற்றும் கிராம தொழில் வாரிய துறைஅமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கியதற்கும் ஒப்புதல் அளிக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பொன்முடி வழக்கின் தீர்ப்பு ஒரு பாடம் : ராமதாஸ்

கலங்கிய பொன்முடி…கண்ணீர் விட்ட விசாலாட்சி: தண்டனை நிமிடங்களில் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share