பொன்முடி வழக்கின் தீர்ப்பு ஒரு பாடம் : ராமதாஸ்

Published On:

| By Kavi

ponmudi case verdict ramadoss reaction

பொன்முடி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று (டிசம்பர் 21) தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றம் செல்ல இருப்பதாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

இதனிடையே பொன்முடியின் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம்.

அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது” என்று தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“பொன்முடிக்கு எதிராக தீர்ப்புத் தந்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்”: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி!

பதவி இழந்த பொன்முடி… ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel