“மூன்று வேளை சாப்பாட்டுக்கு திண்டாடும் இந்திய மக்கள்” : ஆய்வாளரின் ஷாக் ரிப்போர்ட்!

Published On:

| By Kavi

GDP means little if it hides empty plates

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. ஆனால் 140 கோடி மக்களில் பாதி பேருக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில்லை. GDP means little if it hides empty plates

உலகளாவிய பசி குறியீட்டில் (Global Hunger Index, GHI) இந்தியா 105-வது இடத்தில் உள்ளது.

இந்தநிலையில் உலகளாவிய மூலோபாய தகவல் தொடர்பு மற்றும் ஆலோசனை நிறுவனமான ஐசிஆர் ஆய்வாளர் ஹர்திக் ஜோஷி, லிங்கிடின் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று இந்தியாவின் நிலைமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

அதாவது, இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் முதல் 1% பேரை நீக்கிவிட்டால், ஆப்பிரிக்க நாடுகளுடன் கூட நம்மை ஒப்பிடவே முடியாது என்று கூறியுள்ளார்.

அந்த பதிவில், “இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இந்திய மக்களில் பலர் மூன்று வேளை சாப்பாடு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

மிகச் சிறிய பொருளாதாரத்தை கொண்ட பல ஆப்பிரிக்க நாடுகள் பசியை சமாளிப்பதில் சிறப்பாக செயல்படுகின்றன.

அந்தவகையில் நைஜீரியா 100வது இடத்திலும், கென்யா 89வது இடத்திலும், கானா 78வது இடத்திலும் உள்ளன. ஆனால் இந்தியா 105ஆவது இடத்தில் இருக்கிறது.

அப்படியானால் பிரச்சினை எங்குள்ளது?

இந்த பிரச்சினைக்கு காரணம், இந்தியாவில் உள்ள 1% பணக்காரர்கள் இப்போது நாட்டின் செல்வத்தில் 40% ஐக் கட்டுப்படுத்துகின்றனர். இதனால், 70 கோடி மக்கள் (700 மில்லியன்) உணவுப் பாதுகாப்பின்மையுடன் வாழ்கின்றனர். GDP means little if it hides empty plates

எனவே செல்வத்தை பெருக்குவதில் நாம் தேர்ச்சி அடைந்துள்ளோம். அது எப்படி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதை இப்போது கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த பதிவு இந்தியாவின் வளர்ச்சியையோ வெற்றியையோ தாக்குவது அல்ல. அந்த வெற்றி உண்மையில் எங்கே போகிறது என்று கேட்பது பற்றியது. இந்த வெற்றி பெருமான்மை மக்களை உயர்த்துவதற்கா அல்லது சிலரை மட்டும் உயர்த்துவதற்கா?

“காலியான தட்டுகளை மறைக்கும் வகையில் இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒன்றுமே கிடையாது” என்று கூறியுள்ளார்.

அதாவது இந்தியாவில் இன்னும் பல பேர் மூன்று வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். அதை ஒப்பிடும்போதும் ஜிடிபியில் முன்னேற்றம் அடைவது என்பது ஒன்றுமே இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். GDP means little if it hides empty plates

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share