இந்தியாவில் 4 மாநில தலைமை நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 4 state chief judges transfer
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்
திரிபுரா தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்
ஜார்க்கண்ட் தலைமை நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்து கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
அதுபோன்று 10 உயர் நீதிமன்றங்களில் இருந்து 21 நீதிபதிகளை வெவ்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி விவேக் குமார் சிங், மத்திய பிரதேசத்துக்கும், நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திர பிரதேசத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சார்யா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துருகர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயரும்.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்ற நிலையில் கடந்த 26ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் கூடியது. அப்போது முதல் நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்?
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 06-03-1964 அன்று பிறந்தவர் தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா.
பிலாஸ்பூரில் உள்ள கேஆர் சட்டக் கல்லூரியில் எல்எல்.பி.யில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றவர்.
மத்தியப் பிரதேச பார் கவுன்சிலில் 05-10-1987 அன்று சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021ல் ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்ட இவர் 2022ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 4 state chief judges transfer
