நூலிழையில் தப்பிய இந்திய ரூபாய்… எச்சரிக்கையுடன் வர்த்தகர்கள்!

Published On:

| By Minnambalam Desk

indian rupee just escape from felldown

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாறாமல் 85.40 என்ற நிலைத்த அடிப்படையில் நிலைபெற்றது. indian rupee just escape from felldown

‎புதன்கிழமை நடைபெற்ற பரபரப்பான வர்த்தகம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிப்பு, இந்திய பங்குசந்தை குறைவாக காணப்படுவதும் காரணமாக, ரூபாய் மதிப்பு குறைந்து பிறகு மீண்டும் அதே மதிப்பு நிலையில் 85.40-ல் முடிந்தது.

‎‎இன்றைய வர்த்தகத்தின் போது, ரூபாய் 85.59 என்ற மதிப்பில் துவங்கி, ஒரே நாளுக்குள் 85.33 என உயர்ந்ததும், 85.72 என குறைந்ததுமாக ஊசலாடியது.

‎இறுதியில், கடந்த வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை ரூபாய் 30 பைசா குறைந்து 85.40-ல் முடிந்திருந்த அதே நிலையை மீண்டும் இன்று தொடங்கியது மற்றும் முடிந்தது.

‎வெளிநாட்டு பரிவர்த்தக நிபுணர்கள் கூறுகையில், மாத இறுதி நேரத்தில் டாலருக்கான தேவை அதிகரித்ததால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.



‎இது இந்திய ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், நாட்டின் முக்கிய பொருளாதார தரவுகள் வெளியாக உள்ளதால் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தை நடத்தினர்.

‎2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் குறித்தான அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியாவது குறித்தான எதிர்பார்ப்பும் வர்த்தகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share