ADVERTISEMENT

பகத்பாசில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Published On:

| By Selvam

தமிழ் திரைப்படங்களில் பிறமொழி நடிகர்களின் பங்கேற்பு வணிகத்திற்கும், பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறி வருகிறது.

தமிழ்சினிமா முதல்நிலை நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் படங்களின் வியாபாரத்திற்கு மலையாள, கன்னட, தெலுங்கு, இந்தி மொழி நட்சத்திரங்கள் பிரதானமாக இருந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மலையாள சினிமாவில் கதாநாயகனாக வலம் வரும் பகத் பாசில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பகத்பாசில் நடித்துள்ளார். நேற்றைய தினம் நடிகர் பகத் பாசில் பிறந்த நாளை கொண்டாடினார்.

ADVERTISEMENT

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வேட்டையன் படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்  ரஜினி காந்த் மற்றும் அமிதாப் பச்சனுடன் நடிகர் பகத் பாசில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அதே போன்று அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த (450 கோடி ரூபாய்) படங்களின் பட்டியலில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.

நடிகர் பகத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் கலர்புல்லான லுங்கி அணிந்து கொண்டு ஒரு கையில் துப்பாக்கி, மற்றொரு கையில் கோடரியும் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெண் வயிற்றில் இருந்த க்ளிப்… ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு!

உயர்நீதிமன்ற வளாகத்தில் நாய்கள் தொல்லை: நீதிபதிகள் வேதனை!

ஹெல்த் டிப்ஸ்: முட்டி வலிக்கு எளிய தீர்வு!

டாப் 10 நியூஸ்: தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்கம் முதல் ‘அந்தகன்’ ரிலீஸ் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share