டாப் 10 நியூஸ்: தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்கம் முதல் ‘அந்தகன்’ ரிலீஸ் வரை!
இல்லம் தோறும் தேசியக்கொடி!
சுதந்திர தினத்தை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 9) முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்ப் புதல்வன் திட்டம்!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மாலத்தீவு பயணம்!
இரு நாடுகள் நட்புறவை மேம்படுத்தும் வகையில், மூன்று நாள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலத்தீவு செல்கிறார்.
வினேஷ் போகத் தகுதி நீக்க விசாரணை!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த மனுவை விளையாட்டு தீர்ப்பாயம் இன்று விசாரிக்கிறது.
மணிஷ் சிசோடியா ஜாமீன் வழக்கு!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
நாம் தமிழர் பொதுக்கூட்டம்!
உலக பழங்குடிகள் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று தருமபுரி மாவட்டம் அரூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இன்றைய தியேட்டர் ரிலீஸ்!
பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’, ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மின்மினி’, ரஞ்சித் நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’, வேல ராமமூர்த்தி நடித்துள்ள ‘வீராயி மக்கள்’ உள்ளிட்ட படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 145-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: லைம் ரோஸ்ட் சிக்கன்
இங்க மட்டும் கூட மாட்டேங்குது : அப்டேட் குமாரு