செங்கோட்டையன் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும். இதுதொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதற்கு சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 5) செங்கோட்டையன் கருத்து குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “கட்சியை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது.
அவர் முடிவை அவர் சொல்லிவிட்டார். எங்களது முடிவு பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுதான்” என்று கூறினார்.