அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 12) தாக்கல் செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 5 நாட்கள் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து அன்று இரவே புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்தது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இன்றுடன் 5 நாள் கஸ்டடி முடிவடைய உள்ள நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜியை மேலும் 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்துள்ள நீதிபதி அல்லி ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, செந்தில் பாலாஜி மீது 3,000 பக்க குற்றப்பத்திரிக்கையை ஒரு பெட்டியில் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக எடுத்து வந்தது அமலாக்கத்துறை. தொடர்ந்து, குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிக்கையின் நகல் செந்தில் பாலாஜி தரப்பிற்கும் விரைவில் வழங்கப்பட உள்ளது.
மோனிஷா
நாங்குநேரியில் நடப்பது என்ன? மனம் திறக்கும் முன்னாள் பள்ளி முதல்வர்!
நீட் தேர்வு விலக்கு… ஒப்புதல் அளிக்காதது ஏன்? – ஆளுநரிடம் பெற்றோர் ஆதங்கம்!