அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமாரின் மாமியாருக்கு அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 11) சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை சாஸ்திரி பவனில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நான்காவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடந்தி வருகிறது.
இதற்கிடையே கரூர் – சேலம் நெடுஞ்சாலையில் அவரது சகோதரர் அசோக் குமார் 2.49 ஏக்கரில் கட்டி வரும் பங்களாவில் கடந்த 9ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் அசோக் குமாரின் மனைவி நிர்மலா, கட்டப்பட்டு வரும் பங்களா தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் வீட்டு வாசலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.
அவர் ஆஜராகாத நிலையில், பங்களா கட்டப்பட்டு வரும் ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.10 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறி அந்த பங்களாவினை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேலும் முடக்கப்பட்ட நிலம் அசோக்குமாரின் மாமியார் லட்சுமியிடம் இருந்து தான் நிர்மலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மாமியார் லட்சுமி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரிவினைவாதம்: அமைச்சர் எ.வ.வேலு முழுப்பேச்சு இதோ!
பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் கைது!