“படைகளை சோர்வாக்காதீர்கள்” : மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Published On:

| By Kavi

Don't tire indian troops

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை விசாரிக்க நீதித்துறை ஆணையத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (மே 1) மறுத்துவிட்டது. Don’t tire indian troops

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி  காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.  இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. 

இந்தநிலையில் காஷ்மீரைச் சேர்ந்த  ஜுனைத் முகமது வழக்கறிஞர்கள் ஃபதேஷ் குமார் சாஹு மற்றும் விக்கி குமார்  ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். 

அதில், ஜம்மு காஷ்மீர் போன்ற மோதல்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தரநிலைகளை உருவாக்க வேண்டும். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சுற்றுலாப் பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக, மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஆகியவற்றைக் கொண்டு ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் என். கோடிஸ்வர் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. Don’t tire indian troops

அப்போது,  “இதுபோன்ற பொதுநல வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்பு பொறுப்புடன் இருங்கள். நாட்டிற்காக உங்களுக்கும் சில கடமைகள் உள்ளன. இந்த நெருக்கடியான மற்றும் கடினமான நேரத்தில் படைகளின் மனநிலையை சீர்குலைக்க முயற்சிக்கிறீர்களா? ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கச் சொல்கிறீர்கள். ஓய்வுபெற்ற  நீதிபதிகள் புலனாய்வு நிபுணர்களாக மாறிவிட்டார்களா? சொல்லுங்கள்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். 

மேலும்,  “இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட கைகோர்த்திருக்கும் முக்கியமான நேரம் இது. நமது படைகளை சோர்வடையச் செய்யும் எந்த  மனுவையும் தாக்கல் செய்ய வேண்டாம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரச்சினையின் தீவிரத்தை பாருங்கள்” என்று கண்டனம் தெரிவித்தனர். 

தொடர்ந்து இந்த மனுவை விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். Don’t tire indian troops

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share