அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களிலும், அவரது மகனும் பழனி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் தொடர்புடைய இடங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத் துறை இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருக்கு தொடர்புடைய சென்னை, திண்டுக்கல் உட்பட பட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சொத்துக்கள்/முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.