முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆகஸ்ட் 18) போயஸ் கார்டன் செல்கிறார்.
கடந்த மாதம் ஓபிஎஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்தார். இதுதொடர்பாக இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அதை உங்களிடம் சொல்ல முடியுமா’ என்று பதிலளித்தார் சசிகலா.
இந்தநிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று போயஸ் கார்டன் செல்கிறார். போயஸ் கார்டன் என்றதும் அவர் சசிகலாவை சந்திக்க செல்கிறார் என்று தகவல் பரவியது.
இதுதொடர்பாக ஓபிஎஸுக்கு நெருக்கமான வட்டார்த்தில் நாம் விசாரித்த போது, ‘நடிகர் ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தில் 50ஆவது ஆண்டில், பொன்விழா கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு செல்கிறார்’ என்றனர்.
அதேசமயம், சசிகலா இன்று தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் அவரை பலரும் நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஓபிஎஸ் போயஸ் கார்டுனுக்கு வருகை தருவதால் சசிகலாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.









