வைஃபை ஆன் செய்ததும், “காற்றோடு பட்டம் போல” பாட்டை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா..அதிமுக- பாஜக ஏரியாவுல விசேஷமா?
ஆமாய்யா.. டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்திச்சிருக்காரே எடப்பாடி.. பாஜக, தினகரன், வாசன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம்னு எல்லாத்துக்கும் சேர்த்து 50 சீட் கேட்கிறாங்க நாம நேத்து சொல்லி இருந்தோமே..
டெல்லியில அமித்ஷாவை இந்த டைம் எடப்பாடி பழனிசாமி மட்டும் சந்திச்சு பேசுனாரு.. இந்த சந்திப்புல 55 சீட் கொடுக்கனும்னு அமித்ஷா சொன்னாராம்.. எடப்பாடியோ கட்சியில மற்றவங்ககிட்டேயும் பேசிட்டு எவ்வளவுன்னு சொல்றேன்னு பதில் தந்தாராம்.
எடப்பாடியை பொறுத்தவரைக்கும் பாஜகவுக்கும் அதன் நட்பு சக்திகளுக்கும் மொத்தமா 30 கொடுத்தாலே போதும்னு நினைக்கிறாராம்..
சரி.. எடப்பாடிகிட்ட அமித்ஷா வேற என்ன சொன்னாராம்?
இந்த சந்திப்புல ராஜ்யசபா சீட் பத்திதான் ரொம்ப நேரம் பேசுனாங்களாம்.. எடப்பாடிக்கு நெருக்கமானவங்ககிட்ட இதை பத்தி கேட்டப்ப, “அதிமுகவுல தம்பிதுரை, அதிமுக கோட்டாவுல எம்பியான ஜிகே வாசன் ரெண்டு பேரு பதவி காலமும் முடிவடையுது.. பாஜக சொல்லித்தான் ஜிகே வாசனையும் அன்புமணியையும் நாங்க ராஜ்யசபா எம்.பி.யாக்குனோம்..
ஆனா 2024 லோக்சபா எலக்ஷனப்ப அன்புமணியும் ஜிகே வாசனும் எங்க கூட கூட்டணியில இல்லை..
இப்ப நாங்களும் பாஜக கூட்டணியில இருக்கிறோம். .அதனால ஜிகே வாசனுக்கு மறுபடியும் ராஜ்யசபா சீட் கொடுங்கன்னு அமித்ஷா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு..
ஆனா எடப்பாடியோ, “எங்க கட்சியிலேயே நிறைய பேரு கேட்டுகிட்டு இருக்காங்க.. அவங்களுக்கு இந்த டைம் கண்டிப்பா கொடுத்தே ஆகனும்.. அதனால ஜிகே வாசனுக்கு மறுபடியும் தர வாய்ப்பே இல்லையே”ன்னு திட்டவட்டமாக சொல்லிட்டார்” என்கின்றனர்.
எடப்பாடியோட டெல்லி விசிட் அதிமுக சீனியர்கள்கிட்ட புகைச்சலை ஏற்படுத்தியிருக்காம்.. போன டைம் அமித்ஷாவை சந்திக்கும் போது கேபி முனுசாமி எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம்னு கூட இருந்தாங்க.. ஆனா இந்த டைம் ‘எங்களை எல்லாரையும் விட்டுட்டு தனியா போயி அமித்ஷாவை சந்திச்சுட்டாரே’ எடப்பாடின்னு ஆதங்கமாம்..
ஆனா எடப்பாடி தரப்போ, “அமித்ஷாகிட்ட எலக்ஷன் நிதி சம்பந்தமா பேசத்தான் தனியா போனாரு” என்கின்றனர் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
