எப்போதுமே எளிமையான உணவுதான்… ஞாயிற்றுக்கிழமை மட்டும் இட்லியாம்!- முகேஷ் அம்பானியின் உணவு ரகசியம்!

Published On:

| By Kumaresan M

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பையிலுள்ள அண்டாலியா என்ற 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 15 ஆயிரம் கோடி ஆகும் . இந்த வீட்டில் மட்டும் 600 பேர் வரை பணி புரிகின்றனர்.

முகேஷ் அம்பானி எவ்வளவு பிசியாக இருந்தாலும் வீட்டில் இருந்து வரும் உணவுகளைதான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் வீட்டில் ஏராளமான சமையல்காரர்கள் உள்ளனர். தலைமை சமையற்காரருக்கு மட்டும் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இது பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் வாங்கும் சம்பளத்துக்கு சமமானது. இது தவிர, குழந்தைகள் படிப்பு செலவு, இன்சூரன்ஸ் போன்றவையும் சமையல்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே போல, டிரைவர்களும் கிட்டத்தட்ட  மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர்.

ADVERTISEMENT

உணவை பொறுத்த வரை, முகேஷ் அம்பானி எப்போதுமே சாதாரண உணவுகளைதான் சாப்பிடுவாராம். சப்பாத்தி, சோறு, டால் கொஞ்சம் பொறியல் என்பதுடன் அவரின் உணவு முடிந்து விடுமாம்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் நாம் மட்டன், சிக்கன் சாப்பிடுவது போல அம்பானி வீட்டில் காலையில் இட்லி, வடை , சாம்பார் , சட்னி கண்டிப்பாக உண்டாம். முகேஷ் அம்பானி தோசையையும் விரும்பி சாப்பிடுவார். அதே போல, ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் தாய்லாந்து நாட்டு உணவு வகைகள் கண்டிப்பாக இடம் பெறுமாம்.

ADVERTISEMENT

இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி மைசூரில்தான் படித்தார். அப்போது, தென்னிந்திய மசாலா தோசைகளை சாப்பிடுவதை ரெகுலராக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

 ’என் கையை பிடித்து ரஜினி சொன்னது இதுதான்’ : அப்பல்லோ மருத்துவர் சொக்கலிங்கம் விளக்கம்!

நடிகை வனிதா 4வது திருமணமா? ராபர்ட் மாஸ்டருடன் கைகோர்ப்பா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share