நடிகை வனிதா, நான்காவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள்தான் நடிகை வனிதா. சந்திரலேகா என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர். நடிகை வனிதா ஏற்கனவே 3 திருமணங்கள் செய்திருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கடைசியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணமும் நீடிக்கவில்லை. இதற்கிடையே, பீட்டர் பால் மரணமும் அடைந்து விட்டார். முன்னதாக 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவரையும் 2012 ஆம் ஆண்டு ஆனந்த் என்பவரையும் வனிதா திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார்.
பீட்டர் பாலுடனான திருமணம் முறிந்த பிறகு, வனிதா தனியாக வசித்து வருகிறார். அவரது மகன், மகள்களும் வளர்ந்து விட்டனர். அவ்வப்போது, நடிகை வனிதா அடுத்த திருமணம் செய்ய போவதாக தகவல் வெளி வரும். நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை கூட காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்து காதலை வெளிப்படுத்தும் காட்சி போல ஒரு புகைப்படம் வெளியிட்டு, அக்டோபர் 5 என பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இவர்களுக்கு கல்யாணமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது பட தகவலோ அல்லது பாடல் காட்சியின் புகைப்படமாக கூட இருக்கும், புரொமோஷன் வேலையாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். எப்படியானாலும் அக்டோபர் 5 ஆம் தேதி உண்மை தெரிந்து விடும். அதுவரை, காத்திருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
காந்தி 156வது பிறந்தநாள் : ஆளுநர் ரவி, முதலைச்சர் ஸ்டாலின் மரியாதை!
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?