ஐபிஎல் சீசன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், புதுச்சேரியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியின் கிளையை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “போட்டியில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். இந்த சீசனில் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பது உண்மை தான். ஆனால், மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் நன்றாக விளையாடுவதற்கு முயற்சி செய்வோம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல வீரர்கள். Kasi Viswanathan panic Statement

2020-ஆம் ஆண்டு இதே போல, தொடர் தோல்விகளை சந்தித்தோம். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிஎஸ்கே சிறப்பாக விளையாடியது. சிஎஸ்கே மட்டும் தான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதால் அவரால் இந்த ஆண்டு விளையாட முடியாது. ஆனால், அவருடைய ஆலோசனைகள் எங்களுக்குத் தேவை. அணியின் வீரர்களுக்கு அவர் தொடர்ந்து தனது ஆலோசனைகளை வழங்குவார்” என்றார்.
தொடர்ந்து சிஎஸ்கே-வில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், “அயுஷ், அன்ட்ரே சித்தார்த், ஷேக் ரஷித், வன்ஷ் பேடி என 25 வயதுக்கு உட்பட்ட நிறைய பேர் சிஎஸ்கேவில் இருக்கிறார்கள்” என்றார். Kasi Viswanathan panic Statement