மீண்டும் பரவும் கொரோனா: முக கவசம் கட்டாயமா?

Published On:

| By Kavi

Corona is spreading again

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் முக கவசம் அணிவது கட்டாயமா என்பது தொடர்பாக பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. Corona is spreading again

2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது.

2021 இல் படிப்படியாக இந்த வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தது.

இந்த சூழலில் மீண்டும் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 300 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 95 பேரும், தமிழ்நாட்டில் 66 பேரும் மகாராஷ்டிராவில் 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மீண்டும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இது தொடர்பாக சுகாதாரத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களிடம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் பேசுகையில், “கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்று பரவி வரும் தகவல் தவறானது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

முக கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு இதுவரை தமிழக அரசால் வெளியிடப்படவில்லை.

வீரியம் இல்லாத கொரோனோ என்பதால் நோய் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். Corona is spreading again

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share