உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான ஆப்பிள் தங்களுடைய உற்பத்தியை அமெரிக்காவில் செய்யாவிட்டால் 25% சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். trump warning apple to 25% tax on its product
இது குறித்து ட்ரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டுள்ளதாவது:
“அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் இல்லாமல் அமெரிக்காவில் மட்டும்தான் தயாரிக்கப்பட வேண்டும் என நான் எதிர்பார்ப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் நீண்ட காலத்திற்கு முன்பே தெரிவித்திருந்தேன். ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால் 25 சதவீதம் வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் ஐபோன் தயாரிப்பாளரின் பங்குகள் 3%க்கும் அதிகமாக சரிந்துள்ளது.
மார்ச் மாதத்தின் வரையிலான 12 மாதங்களில் (ஏப்ரல் 2024 – மார்ச் 2025) ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களை உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 60% உற்பத்தி அதிகமாகும்.

இந்தியாவில் ஐபோன்கள் தயாரிப்பிற்கு முக்கியமான காரணங்களாக அமைவது இங்கே தொழிலாளர்களின் ஊதியம் அமெரிக்காவைக் காட்டிலும் பத்தில் ஒரு பங்கு தான்.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதிக அளவிற்கான முதலீடுகளை செய்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பு (Reciprocal Tariff) அறிவித்த நாள் அன்று ஆப்பிள் நிறுவனம் சீனா மற்றும் இந்தியாவில் 42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக கூறியிருந்தார்கள். எனினும் அதில் தனக்கு உடன்பாடு இல்லை அமெரிக்காவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
அப்போதே ஆப்பிள் நிறுவனம் பங்கு சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு உலகின் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.