கேரளா மாநிலம் கொச்சி துறைமுகம் அருகே நடுக்கடலில் கண்டெய்னர்களை ஏற்றி வந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்து மூழ்கியது. இந்த கப்பலில் பயணித்த 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். Container Ship Sinks
கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி கண்டெய்னர்களுடன் அரபிக் கடலில் சரக்குக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. கொச்சி துறைமுகத்தில் இருந்து பின்னர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்துக்கு இந்த கப்பல் பயணிக்க இருந்தது.
ஆனால் கொச்சி துறைமுகத்தை சென்றடைவதற்கு முன்னதாக நடுக்கடலில் இந்தக் கப்பல் கவிழ்ந்து மூழ்கியது. இந்தக் கப்பலில் லைபீரிய நாட்டின் கொடி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டெய்னர்களுடன் மூழ்கிய இந்த சரக்குக் கப்பலில் பயணித்த 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் கண்டெய்னர்கள் கரை ஒதுங்கும் நிலையில் பொதுமக்கள் அதன் அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.