புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் ஜூலை 23 முதல் 26 வரை சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் மே 25-ஆம் தேதி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தலைமையில் நடைபெற்றது. TN Govt Employees announces hunger strike
இந்தக்கூட்டத்தில்,
▪️ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும்.
▪️திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 -ன் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
▪️பணிக் கொடை வழங்க வேண்டும்.
▪️குடும்ப ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,
23.7.25 காலை 10 மணி துவங்கி 26.7.25 காலை 10 மணி வரை சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
72 மணி நேர உண்ணாவிரதத்தில் முதல் குழுவில் 15 பேர்கள் பங்கேற்பது எனவும், உண்ணாவிரதம் நடைபெறும் ஜூலை 23, 24, 25 மூன்று நாட்களும் மாநிலம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது எனவும், உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக 23.7.25 அன்று வட்ட அளவிலும், 26.7.25 அன்று மாவட்ட அளவிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. TN Govt Employees announces hunger strike
