சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் “மாமல்லன் நீர்த் தேக்கத்துக்கு” முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜனவரி 19-ந் தேதி அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “ கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
நீர்ப் பாதுகாப்புக்காகப் பாடுபடும் 15 NGO-களின் அக்கறையை அங்கீகரித்து சிறப்பு விருதுகளையும் இவ்விழாவில் வழங்கிப் பாராட்டினேன்.
வான் பெய்து, நிலம் நனைத்து, கடல் சேரும் நீரைக் கரை கட்டி, நெடுவயல் நிறையவும் – மக்களின் தாகம் தணியவும் செயலாற்றுவோம்! என தெரிவித்துள்ளார்.
