எடப்பாடி பழனிசாமியை சந்தித்தாரா தனியரசு?

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Jan 2026, 12:22 PM

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இன்று (ஜனவரி 19) திடீரென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் ஜனவரி 23ம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று காலை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது.

தனியரசு மறுப்பு

ADVERTISEMENT

இந்நிலையில் தனியரசு கூறுகையில், “அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சக்கரபாணியை தான் பார்க்க சென்றேன். ஆனால் அவர்களை பார்க்க முடியவில்லை. பசுமை வழிச்சாலை வழியாக அமைச்சர்களை பார்க்கவே சென்றேன். எடப்பாடியை சந்தித்தேன் என்பது தவறான தகவல்” என கூறினார்.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தனியரசு சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

நவம்பரில் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இபிஎஸ் இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சியையும் சரிவையும் இழப்பையும் கட்டாயமாக சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். திராவிட முன்னேற்றக் கழகமும் அதனுடைய அணியும் மிக வலிமையான அணி; கிட்டத்தட்ட தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற அணி. அதிமுக கூட்டணியில் பத்தாண்டுகள் இருந்தோம், ஆனால் இன்று பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது என்பது வேதனையாக உள்ளது” எனக் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel