இரவு நேர மின் தடை … 60 பறக்கும் படைகள் அமைப்பு!

Published On:

| By Kavi

இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையை சரி செய்வதற்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், வீடுகளில் ஏசி, ஏர் கூலர் ஆகிய மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதனால் மின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மின் தடையும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது.

இந்நிலையில் இன்று (மே 6) சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 60 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 20,000 மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் தேவை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மே மாத இறுதி வரை அதிக நுகர்வு ஏற்பட்டாலும், அதை சமாளிக்க மின் வாரியம் தயாராக இருக்கிறது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மதிமுக நிரந்தர சின்னம் பெறும் : 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் வைகோ பேட்டி!

தக் லைஃப் : சிம்பு Glimpse வீடியோ ரிலீஸ்..?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share