முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு!

By Minnambalam

|

Published on 9 Jan 2024, 12:51 PM

chennai HC dismiss rajesh dass pettion

Chennai HC dismiss rajesh dass petition

சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 9) உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ADVERTISEMENT

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருந்தது.

ஆனால் வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனு கடந்த ஜனவரி 5 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேஷ் தரப்பில், “விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால் வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.

இந்த மனு மீது உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த மனு மீது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை விழுப்புரம் நீதிமன்றத்தில் எதுவும் நடக்காது என்றும் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட விவரத்தை அரசு வழக்கறிஞர் மூலம் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு தடையில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மும்பைக்கு கட்டம் சரியில்ல…. ஐபிஎல் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!

Chennai HC dismiss rajesh dass petition

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel