மாதக் கடைசியானாலே “அச்சச்சோ! சம்பளம் எங்கே போனதுன்னே தெரியலையே?” என்று புலம்புபவரா நீங்கள்? கையில் பணம் புழங்கிய காலத்தில், நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது கண்ணுக்குத் தெரியும். ஆனால், ‘கூகுள் பே’ (GPay), கார்டு ஸ்வைப் என்று எல்லாம் டிஜிட்டலான பிறகு, பணம் கரைவது கண்ணுக்கே தெரிவதில்லை.
இதைக் கட்டுப்படுத்த, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய ‘கவர் சிஸ்டத்தை’ (Envelope System), நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து ‘கேஷ் ஸ்டஃபிங் 2.0′ (Cash Stuffing 2.0) என்ற பெயரில் இன்றைய இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.
அது என்ன பழைய முறை? அந்தக் காலத்தில் சம்பளம் வந்ததும், வீட்டு வாடகைக்கு ஒரு கவர், மளிகை சாமானுக்கு ஒரு கவர், பால்/கரண்ட் பில்லுக்கு ஒரு கவர் என்று தனித்தனியாகப் பணத்தைப் பிரித்து வைத்துவிடுவார்கள். அந்த கவரில் பணம் தீர்ந்துவிட்டால், அந்த மாதத்திற்கு அவ்வளவுதான் செலவு! இதுதான் ‘கேஷ் ஸ்டஃபிங்’.
இது என்ன 2.0 முறை? (Digital Buckets) இப்போது யாரும் கையில் பணத்தை வைத்துக்கொள்வதில்லை. அதனால், வங்கி செயலிகளிலேயே (Banking Apps) ‘பக்கெட்டுகள்’ (Buckets) அல்லது ‘வால்ட்ஸ்’ (Vaults) என்ற வசதியை உருவாக்கிப் பணத்தைப் பிரிப்பதுதான் இந்த 2.0 முறை.
எப்படிச் செய்வது? உங்களிடம் ஒரே ஒரு சேமிப்புக் கணக்கு (Savings Account) இருந்தால், எல்லாப் பணமும் அதில்தான் இருக்கும். ஸ்வைப் செய்யும்போது, வாடகைக்குப் வைத்த பணத்தை எடுத்து சினிமாவுக்குச் செலவு செய்துவிடுவோம். இதைத் தடுக்க:
- பல கணக்குகள் / டிஜிட்டல் பாக்கெட்டுகள்: இப்போது பல ‘நியோ பேங்குகள்’ (Neo-Banks) ஒரே கணக்கிற்குள் பல பிரிவுகளை (Sub-accounts) உருவாக்க அனுமதிக்கின்றன.
- Buckets 1 (வாடகை & பில்): இது தொடக்கூடாத பணம்.
- Buckets 2 (மளிகை & பெட்ரோல்): அத்தியாவசியத் தேவை.
- Buckets 3 (Fun Money): சினிமா, ஹோட்டல், ஷாப்பிங்.
- ஆட்டோமேட்டிக் பரிமாற்றம்: சம்பளம் வந்த அன்றே, தானாகவே (Auto-transfer) இந்தப் பிரிவுகளுக்குப் பணம் சென்றுவிடுமாறு செட் செய்துவிட வேண்டும்.
- காலி ஆனால் ஸ்டாப்! உதாரணத்திற்கு, உங்கள் ‘Fun Money’ பக்கெட்டில் ரூ.5000 போட்டிருக்கிறீர்கள். அது தீர்ந்துவிட்டால், அந்த மாதத்தில் இனி ஹோட்டல் பக்கம் போகக்கூடாது. முக்கியக் கணக்கில் பணம் இருந்தாலும் அதை எடுக்கக்கூடாது.
ஏன் இது ஹிட் அடிக்கிறது?
- குற்றவுணர்ச்சி இருக்காது: ‘Fun Money’ என்று ஒதுக்கிய பணத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம். பட்ஜெட் இடிக்காது.
- விஷுவல் கிளாரிட்டி (Visual Clarity): மொபைல் ஆப்பைத் திறந்தாலே, எந்தெந்த செலவுக்கு எவ்வளவு பணம் மிச்சம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.
கையில் காசு தங்கலைனு கவலைப்படறதை விட்டுட்டு, உங்க வங்கி ஆப்-ல (App) கொஞ்சம் ‘வேலை’ செஞ்சு பாருங்க. டிஜிட்டல் உலகத்துல சிக்கனமா இருக்க இதுதான் பெஸ்ட் வழி!
