ADVERTISEMENT

ஹெல்த் டிப்ஸ்: போர்னோகிராபி அடிக்‌ஷன்… மண வாழ்க்கையை பாதிக்குமா?

Published On:

| By Selvam

“எப்போதாவது ஒருமுறை போர்ன் (Porn) படங்கள் பார்ப்பது தவறில்லை. ஆனால், ஒருவர் மீண்டும் மீண்டும் ஆபாசத் திரைப்படங்களையே அதிகமாகப் பார்த்துக்கொண்டிருந்தால், `பைடு’ எனப்படும் `பார்ன் இண்ட்யூஸ்டு எரக்டைல் டிஸ்ஃபங்ஷன்’ (PIED -Porn-induced erectile dysfunction) என்றொரு நிலை உண்டாகும்.

அதாவது, தொடர்ந்து செக்ஸ் படங்களையே பார்த்துக்கொண்டிருக்கும்போது ஆண்மைக் குறைவு ஏற்படும். காரணம், அதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட காட்சித் தூண்டல்களுக்கே ஆண் உறுப்பு எழுச்சி பெற்றுப் பழக்கமாகி விடுவதால், நிஜ வாழ்க்கையில் மனைவியுடன் இயல்பான தாம்பத்யம் கொள்ளும்போது எழுச்சி நிகழாது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல், பெண்களைத் தங்களுக்குச் சமமாகப் பார்க்காமல் பாலியல் தேவைக்குப் பயன்படும் பொருள் போலப் பார்ப்பது, அவர்களிடம் தவறாக நடந்து கொள்வது, தவறான முறையில் செக்ஸில் ஈடுபடுவது தவறல்ல என்று நினைப்பது, தனி மனித நேர்மை பாதிக்கப்படுவது போன்ற எதிர்மறை விளைவுகள் இதன்மூலம் உண்டாகும்.

பெண்களைப் பார்த்தாலே அவர்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். யார், யாருடன் வேண்டுமானாலும் செக்ஸ் கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் இது கொடுத்துவிடும்.

ADVERTISEMENT

இதன் காரணமாக, மனதின் தரம் மற்றும் வாழ்க்கையின் தரமும் குறைந்துவிடும். எனவே, `ஆபாசத் திரைப்படங்களைப் பார்ப்பது குற்றமல்ல, ஏனென்றால் அதை எல்லோரும் பார்க்கிறார்கள்’ என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அளவுக்கு அதிகமாகும்போது அது ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது என்பதே உண்மை.

ஆபாசத் திரைப்படங்களைப் பார்ப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதோடு, மண வாழ்க்கையையும் பாதிக்கும்.

ADVERTISEMENT

ஆபாசத் திரைப்படங்களைப் பார்க்கும்போது, அது ஒருவித எக்சைட்மென்ட்டையும் த்ரில்லையும் கொடுக்கும். குறிப்பாக, ஆபாசத் திரைப்படங்களில் வெவ்வேறு விதமாக உறவு கொள்வதைப் பார்க்க நேரிடும்.

இதனால், ஆபாசத் திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பவர்களுக்கு இயல்பான செக்ஸ் வாழ்க்கை என்பது டல்லாகவும் வழக்கமான செயல் போலவும் தோன்ற ஆரம்பித்துவிடும்.

மேலும், ஆபாசத் திரைப்படங்களை அதிக அளவில் பார்க்கும்போது பதற்றம், மன அழுத்தம், திருமண உறவில் நெருக்கமின்மை, செய்யும் வேலையில் கவனமின்மை போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.

ஆபாசத் திரைப்படங்களைப் பார்க்கும் செயலானது ஒருவருக்கு அடிமைத்தனமாக (Addiction) மாறிவிட்டால் அதற்குக் கட்டாயம் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும்.

மருந்துகள் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பிஹேவியரல் தெரபி போன்ற பல்வேறு சிகிச்சைகளை மருத்துவர்கள் அளிப்பர்.

ஒரு நாளில் ஓரிரு முறை ஆபாசத் திரைப்படங்களைப் பார்க்கும் போர்னோகிராபி ஹேபிட், அதாவது பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து மீள சில முன்னெடுப்புகளைத் தாங்களாகவே எடுக்கலாம். அதற்கு, ஆபாசத் திரைப்படங்கள் பார்க்கும் இயல்புள்ளவர்கள் தனியாக அறையில் இருப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்” என்று இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளி வற்றல் குழம்பு

ஜூலை 28… அமெரிக்கா புறப்படுகிறார் ஸ்டாலின்

அன்றே கணித்தார் தமிழிசை : அப்டேட் குமாரு

ஆம்ஸ்ட்ராங் கொலை தாக்கம் : பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share